Friday, October 9, 2009


எனது வானொலி நிகழ்ச்சிகள் (70) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது
நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம்
இலவசமா
பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com
வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்004917635951810


கேட்க முடியாத நேயர்களுக்கு ஒலிப்பதிவு அனுப்பி வைக்கப்படும்.
http://www.esnips.com/web/ENDRUMINIYAVAI

Tuesday, July 28, 2009

முருகன்
--------
எனை ஆழும் பால முருகன் வந்தான்
நம் குறை தீர்க வேலவன் வந்தான்
தீராத வினைகளை அகற்றிட வந்தான்
தந்தையாய் நம்மோடு இனைந்திட வந்தான்
(எனை அழும்)

வாயார பாடிட மகிழ்வோடு துதித்திட
மயில் ஏறி வந்தான் எம்முன்னே வந்தான்
சங்கடங்கள் நீக்கி பெருவாழ்வு தந்தான்
இறை மகனே உன்னாலே இருபொழுதும் இன்பம்

(எனை ஆழும்)

கற்பனையை மிஞ்சகின்ற அற்பதச்சுடரே
முற்பிறவி பாவங்களை முழுதாய் விலக்கி..
கற்பகமாய் ஆக்கிவைத்து கனிவோடு வழிநடத்தி
தீராத நோயில் இருந்து என்னை மீட்டருள்வாய்

(எனை ஆழும்)
என்தாயே
----
தாயே அருள் போற்றி

நாயகியே அருள் போற்றி.

அறியாமையின் இருள் நீக்கி
ஞனஒளி தந்தருவாய்
ஆயிரம் இதழ்கொண்ட தேவி நீ
என் ஆதி சக்தியும் நீ

என் சிந்தை முழுதும் நீ..என்று
நித்தம் பாடுகின்றேன்
என்னை மறவாதிருந்து உன் மனம் இரங்கி
என் முன் வந்து காட்சி தந்தருள்வாய் தாயோ.
---

Wednesday, March 25, 2009

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமா.

ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகா
உன் திருப்பாதம் சரணடைந்தோம் வேல் முருகா..
வோல் முருகா
ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகா..
உன் திருப்பாதம் சரணடைந்தோம் வேல் முருகா..
வோல் முருகா


சந்தனம் மணக்குது பழனியிலே
திருநீறு மணக்குது தனிகையிலே
சேவலும் வேலும் துணையிருக்க
சேவலும் வேலும் துணையிருக்க
வேறென்ன வேண்டும் தமிழ் முருகா..தமிழ் முருகா
(ஆறுபடை வீடு..)
இச்சை என்றும் கிரியை என்றும் வாழ வைத்தாய்
நெற்றிக் கண்ணில் வந்துதித்து தமிழ் வளர்தாய்
பெண்ணை தேடி அண்ணணையே தூதுவிட்டாய்
பெண்ணை தேடி அண்ணணையே தூதுவிட்டாய்
எங்கள் குலம் வாழ வந்து அருள் கொடுத்தாய் அருள்கொடுத்தாய்.
(ஆறுபடை வீடு..)

அன்புடன் ராகினி

Monday, January 19, 2009

முருகன் கீதம்

பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா
வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே)

கலைவாணி

கலைவாணி நின் அருளே கலைவாணி நின் அருளே உன் பாதங்கள் பூஜிக்கின்றேன்கல்விக்கு அதிபதி ஆணவளே உன் திருவடி வரம் வேண்டிதொழுகின்றேன் (2)

(கலைவாணி நின்)
நான்முகன் நாயகியே நான்முகன் நாயகியேகுலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்என் குலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்நாத்தின்திருவுருவே.. உன் பாதமலர் பணிந்து பாடுகின்றேன்(2) உனது உருவத்தை என் சிந்தையிலே நிறுத்துகின்றேன்.(2)வேதவடிவானவளே என் வேதவடிவானவளேதித்திக்கும் தௌ;ளமுதே உன் நாமத்தை பாடுகின்றேன் உன் நாமத்தை பாடுகின்றேன்


(கலைவாணி நின்)

தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளே தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளேசந்தனம் போல் ஒளிதருபவளே வாசனை மலரில் இணைந்தட்டவளேவீணையின்ஸ்வரங்களை மீட்டிருப்பவளே இவள்தான் உங்கள் கலைவாணிஉன் புகழை நான் இங்கு பாடுகின்றேன்(2)
(கலைவாணி நின்)

அம்மன் பாடல்

ஜெர்மனியின் நாயகியே--அம்மன் பாடல்
-----


எல்லையில்லா இன்பம் தரும் ஜெர்மனியின் நாயகியே
முல்லை மலர்ச்சிரிப்பாலே தொல்லை துயர் விலகிடடுமே.
தொல்லை துயர் விலகிடடுமே

அன்னக்கும் அன்னையாகி கண்ணுக்கு ஒளியுமாகி
முன்னை வினை தீர்த்து முப்பொழுதும் காக்கின்றாய்
என் மனதின் ஏக்கத்தை சொல்லி அழ வார்த்தையில்லை
அன்னை இதை அறியாயோ? ஆதரித்து அருள்புரிவாய்

(எல்லையில்லா இன்பம்)
நேர்த்தியாய் வாழ்விக்கும் கீர்த்தி நிறைந்தவள் நீ..
பூர்த்தி செய்வாயே உனைப்பாடும் பாடலையே
வார்த்தைகளை தேடுகின்றேன் வாழ்த்தியுனைப்பாடிடவே
வாட்டமதை போக்கி எனை வாழ்த்தி அருளாயோ.
(எல்லையில்லா இன்பம்)

விநாயகன் மலர்ப் பதம்

விநாயகன்
---------


விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.

(விநாயகன் மலர்ப் பதம்)

பண்ணிய பாபங்கள் அகலுமே-உள்ளம்
புண்ணிய பூமியாய் மாறுமே.-அதனால்
எண்ணியதெல்லாம் ஜெயமாக்கும்
விநாயகன் மலர்ப் பதம் பணிவேனே-முறிகண்டி
நாயகன் மலர்ப் பதம் பணிவேனே.

(விநாயகன் மலர்ப் பதம்)

மோதகப் பிரியனை தினந்தோறும்
போற்றவே யோகமே கை கூடும்.
பாதக வினையிருள் விலகுமே.
சாதனை பெரும்புகழ் மலருமே.

(விநாயகன் மலர்ப் பதம்)


கருணைக்கு அவன் ஒரு இலக்கணம்-என்
கருத்துக்கு அவன் ஒரு இலக்கியம்.
முருகனின் சோதரன் மலர்ப் பதம்
முத்திக்கு வித்தாகும் அற்புதம்.

(விநாயகன் மலர்ப் பதம்)
பக்தி கீதங்களுடன்
ராகினி

முருகன் பாடல்.

முருகன் பாடல்.
----------

சித்தம் தெளிய வைத்த நாயகனே
சித்தம் தெளிய வைத்த நாயகனே
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா
உன் நாமத்தை உச்சரிக்க நாவே இனிக்குதையா

(சித்தம் தெளிய வைத்த)

தந்தைக்கு உபதேசம் அருளிய வேலவனே
அழகுக்கு இலக்கணமானவனே
உலகிற்கு பொருள் சேர்க்கும் வேலவனே
உன் திருவடியே சரணமென பாடுகின்றேன்(2)

(சித்தம் தெளிய வைத்த)

விண்ணுக்கும் மண்ணுக்கும் காந்த ரூபனே
என் கண்ணுக்கு ஒளிதரும் என் அருள் நாயகனே
தினம் உன்னை அன்பால் தேடுகின்றேன்
உன் இதயக்கதவை திறவாயோ முருகா(2)

(சித்தம் தெளிய வைத்த)


பக்தி கீதங்களுடன்
ராகினி