Monday, January 19, 2009

முருகன் கீதம்

பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா
உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா
வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2)
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை

(பழமுதிர் சோலையிலே)

முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா
வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே)

4 comments:

  1. வ‌ண‌க்க‌ம். ந‌ம‌ஸ்கார‌ம். ந‌ம‌ஸ்தே.
    உங்கள் பின்னோட்டத்தை ஒரு பதிவில் பார்த்தபின் உங்கள் பதிவுக்கு வந்தேன்.
    பல பதிவுகள் இட்டிருக்கிறீர்கள். முதலாக, வந்தது முருகனைப் பாடும் பதிவு.
    பலரது கவிதைகளை, பாடல்களை, எனக்குத் தெரிந்த வகையில் கர்னாடக‌
    சங்கீததின் மெட்டுகளில் இசையமைத்து யூ ட்யூபில் போடுவது வயதான எனக்கு
    ஒரு பொழுது போக்கு. ஏதோ இலக்கியத்துக்கு, இசைக்கு என சில பதிவுகளும்
    எழுதுகிறேன்.

    எனது இசையமைப்புகள் மேடம் கவினயா அவர்கள், ஜீவா அவர்கள், குமரன்
    அவர்கள் பாடல்களுக்கு ஏற்கனவே ஏராளமாக யூ ட்யூபில் உள்ளன.

    நீங்கள் அனுமதி அளித்தால் உங்களது பாடல்களையும் இசை அமைத்து யூ ட்யூபில்
    போடுகிறேன். நோ க‌ம‌ர்ஷிய‌ல் பேஸிஸ்.

    ப‌ழ‌முதிர் சோலையிலே பாட்டு த‌ர்பாரி கான‌டா ராக‌த்தில் வ‌ருகிற‌து. உங்க‌ள் அனும‌தியை எதிர்பார்த்து அமைக்கிறேன்.

    ஆமாம். நீங்க‌ள் என்ன‌ கேர‌ள‌த்தைச் சேர் ந்த‌வ‌ரோ ? சில‌ வார்த்தைக‌ள் ம‌லையாள்
    வார்த்தைக‌ள் போல் இருக்கின்ற‌ன‌வே.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ற்ச‌ம‌ய‌ம் ஸ்டாம்ஃபோர்டு, க‌னெக்டிகெட்.

    ReplyDelete
  2. THIS SONG CAN BE LISTENED IN RAAG DHARBARI KANADA AT
    http://ceebrospark.blogspot.com

    ReplyDelete
  3. நான் பாடி உள்ளேன் இத்தனைபாடல்களையும் என்னும் உள்ளது கேட்கவும் என்பெயரில் வெளியிட்டால் என் ஊக்கத்தும் உதவியாக இருக்கும் எடுத்து பாடவும்

    ReplyDelete