Tuesday, July 28, 2009

முருகன்
--------
எனை ஆழும் பால முருகன் வந்தான்
நம் குறை தீர்க வேலவன் வந்தான்
தீராத வினைகளை அகற்றிட வந்தான்
தந்தையாய் நம்மோடு இனைந்திட வந்தான்
(எனை அழும்)

வாயார பாடிட மகிழ்வோடு துதித்திட
மயில் ஏறி வந்தான் எம்முன்னே வந்தான்
சங்கடங்கள் நீக்கி பெருவாழ்வு தந்தான்
இறை மகனே உன்னாலே இருபொழுதும் இன்பம்

(எனை ஆழும்)

கற்பனையை மிஞ்சகின்ற அற்பதச்சுடரே
முற்பிறவி பாவங்களை முழுதாய் விலக்கி..
கற்பகமாய் ஆக்கிவைத்து கனிவோடு வழிநடத்தி
தீராத நோயில் இருந்து என்னை மீட்டருள்வாய்

(எனை ஆழும்)
என்தாயே
----
தாயே அருள் போற்றி

நாயகியே அருள் போற்றி.

அறியாமையின் இருள் நீக்கி
ஞனஒளி தந்தருவாய்
ஆயிரம் இதழ்கொண்ட தேவி நீ
என் ஆதி சக்தியும் நீ

என் சிந்தை முழுதும் நீ..என்று
நித்தம் பாடுகின்றேன்
என்னை மறவாதிருந்து உன் மனம் இரங்கி
என் முன் வந்து காட்சி தந்தருள்வாய் தாயோ.
---