கடவுளை மனதார நினைத்தால் துன்பங்கள் யாவும் நம்மை விட்டு கரைந்தோடிவிடும்
Friday, October 9, 2009
எனது வானொலி நிகழ்ச்சிகள் (70) ஓரே சீடியாக வெளிவந்துள்ளது நிகழ்ச்சி தொகுப்பை நீங்கள் தொடர்ந்து 18 மணித்தியாளமும் 30 நிமிடங்களும் கேட்கலாம் இலவசமாக பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.kavithaikuyil@gmail.com வானொலி நிகழ்ச்சிகளை நீங்கள் கேட்டு மகிழ. தொடர்பு கொள்ள வேண்டிய தெலைபேசி இலக்கம்004917635951810
ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகா உன் திருப்பாதம் சரணடைந்தோம் வேல் முருகா.. வோல் முருகா ஆறுபடை வீடுகொண்ட ஆறுமுகா.. உன் திருப்பாதம் சரணடைந்தோம் வேல் முருகா.. வோல் முருகா
சந்தனம் மணக்குது பழனியிலே திருநீறு மணக்குது தனிகையிலே சேவலும் வேலும் துணையிருக்க சேவலும் வேலும் துணையிருக்க வேறென்ன வேண்டும் தமிழ் முருகா..தமிழ் முருகா (ஆறுபடை வீடு..) இச்சை என்றும் கிரியை என்றும் வாழ வைத்தாய் நெற்றிக் கண்ணில் வந்துதித்து தமிழ் வளர்தாய் பெண்ணை தேடி அண்ணணையே தூதுவிட்டாய் பெண்ணை தேடி அண்ணணையே தூதுவிட்டாய் எங்கள் குலம் வாழ வந்து அருள் கொடுத்தாய் அருள்கொடுத்தாய். (ஆறுபடை வீடு..)
பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா பழமுதிர் சோலையிலே குடி கொண்ட வேல் முருகா உன்னை காண்பதற்கு பக்தர்கள் காத்திருக்க(2) வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை (பழமுதிர் சோலையிலே)
துண்பங்கள் வந்திடுனும் காத்திடும் திருக்குமரா வறுமை பிடியினிலும் நீக்கடிடும் குருபரனே (2) வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை
(பழமுதிர் சோலையிலே)
முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே முக்கனி முத்தமிழில் சிரித்த முகம் தனிலே குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா குளிர்ந்த பார்வையும் உன்கெண்ட வேல் முருகா வருவாய் வடிவேலா தருவாய் ஆறுதலை (பழமுதிர் சோலையிலே)
கலைவாணி நின் அருளே கலைவாணி நின் அருளே உன் பாதங்கள் பூஜிக்கின்றேன்கல்விக்கு அதிபதி ஆணவளே உன் திருவடி வரம் வேண்டிதொழுகின்றேன் (2)
(கலைவாணி நின்) நான்முகன் நாயகியே நான்முகன் நாயகியேகுலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்என் குலமகளே உனை வரம் வேண்டி தொழுகின்றேன்நாத்தின்திருவுருவே.. உன் பாதமலர் பணிந்து பாடுகின்றேன்(2) உனது உருவத்தை என் சிந்தையிலே நிறுத்துகின்றேன்.(2)வேதவடிவானவளே என் வேதவடிவானவளேதித்திக்கும் தௌ;ளமுதே உன் நாமத்தை பாடுகின்றேன் உன் நாமத்தை பாடுகின்றேன்
(கலைவாணி நின்)
தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளே தாமரைப்பூவினில் வீற்றிருப்பவளேசந்தனம் போல் ஒளிதருபவளே வாசனை மலரில் இணைந்தட்டவளேவீணையின்ஸ்வரங்களை மீட்டிருப்பவளே இவள்தான் உங்கள் கலைவாணிஉன் புகழை நான் இங்கு பாடுகின்றேன்(2) (கலைவாணி நின்)
எல்லையில்லா இன்பம் தரும் ஜெர்மனியின் நாயகியே முல்லை மலர்ச்சிரிப்பாலே தொல்லை துயர் விலகிடடுமே. தொல்லை துயர் விலகிடடுமே
அன்னக்கும் அன்னையாகி கண்ணுக்கு ஒளியுமாகி முன்னை வினை தீர்த்து முப்பொழுதும் காக்கின்றாய் என் மனதின் ஏக்கத்தை சொல்லி அழ வார்த்தையில்லை அன்னை இதை அறியாயோ? ஆதரித்து அருள்புரிவாய்